டன் ஒருவரைத் தூங்கவிடாது. நிம்மதி யாக இருக்கவிடாது. ஏன்- ஒட்டுமொத்தத்தில் வாழவேவிடாது. கடன் தொல்லை நம்மைப் பாடாய்ப்படுத்தும். நாமும் எவ்வளவுதான் நெருக்கிப் பிடித்து சிக்கனமாக இருந்தாலும், கடன் தொல்லை நம்மைவிட்டு விலகாமல் கூடவே ஒட்டிக்கொண்டிருக்கும். இதற்கு நம்முடைய கிரகங்களும் காரணமாக இருக்கும்.

Advertisment

கடன் தொல்லை தீர நிறைய பரிகாரங்கள் உண்டு. ஒவ்வொரு ராசிக்கும் அவர்களின் கிரக நிலைகளுக்கேற்ப பரிகாரங்கள் வேறுபடும்.

அப்படி எந்த ராசிக்காரர்கள் என்னவிதமான பரிகாரங்கள் செய்யவேண்டும்?

மேஷம்

தயிரைக்கொண்டு ஏதேனும் மஞ்சள்நிற இனிப்புப் பண்டம் தயார்செய்து, ஒவ்வொரு வெள்ளியும் மாலை வேளையில் பசுவுக்குக் கொடுத்துவர கடன்கள் நீங்கி வளம் பெறலாம்.

ரிஷபம்

ஜவ்வரிசிகொண்டு இனிப்பு தயாரித்து, அதை வெள்ளியன்று பசுவுக்கு மாலை வேளையில் கொடுத்துவர, கடன்கள் அடைந்து சுகம் பெறலாம்.

மிதுனம்

Advertisment

தினசரி சிறிது தயிர் சேர்த்துக் குளித்து வரவும். கடன்கள் நீங்கும். மாலை வேளையில் அஸ்தமனத்திற்குமுன் சூரிய தரிசனம் செய்துவரவும்.

கடகம்

ஒவ்வொரு ஞாயிறும் சிறிது வெல்லக் கட்டியை ஓடும் நீரில் விடவும். ஞாயிறன்று அச்சு வெல்லக்கட்டியை குரங்குகளுக்குக் கொடுத்து வரவும்.

சிம்மம்

ஒவ்வொரு சனிக்கிழமையும் அரச மரத்தடி யில் மண் அகலில் நல்லெண்ணெய் ஊற்றி கருப்புத் திரிகொண்டு எட்டு விளக்குகள் ஏற்றிவர கடன்கள் அடைய வழிபிறக் கும்.

கன்னி

Advertisment

சனிக்கிழமை களில் உளுந்து வடை தானம் செய்யவும். (நீங்கள் உண்ணக் கூடாது.) மேலும் துளசிக்கு தினசரி நீர்வார்த்து, ஒரு மண் அகலில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வைக்க ருண நிவாரணம் பெறலாம்.

12

தனுசு

வீடிழந்தோருக்கு வீடு கட்ட செவ்வாய்க் கிழமைகளில் செங்கல்கள் முடிந்த அளவு வாங்கிக்கொடுக்க, கடன்கள் அடைந்து நிம்மதி பெறலாம்.

மகரம்

சனிக்கிழமைகளில் எள்ளுருண்டை செய்து பலருக்கு தானமாய்க் கொடுத்து வர கடன் தொல்லை நீங்கும்.

கும்பம்

வியாழன் மாலை 5.00-6.00 மணிக்குள் குங்குமப்பூ சேர்த்த பாதாம் கீர் செய்து, மகா விஷ்ணுவுக்கு நிவேதனம்செய்து, முதலில் தான் அருந்திவிட்டு பின்பு மற்றோருக்கும் தானமாய்- பிரசாதமாய்க் கொடுத்துவர கடன்கள் அடைபடும்.

மீனம்

தொழுநோயாளிகளுக்கு சப்பாத்தியை தானமாக செவ்வாய்க்கிழமை மதியம் 1.00-2.00 அல்லது இரவு 8.00-9.00 மணிக்குள் கொடுத்துவர கடன்கள் வேகமாக அடைய ஆரம்பிக்கும். குறைந்தது ஒன்பது சப்பாத்திகள் கொடுப்பது நலம்.

அந்தந்த ராசிக்காரர்கள் மேற்கண்ட பரிகாரங்களைச் செய்தால் கடனிலிருந்து சற்று விடுதலை கிடைக்கும். நம்பிக்கையோடு செய்வோம்; நலம் பெறுவோம்.

கடன் தீர்க்கும் செவ்வாய்க்கிழமை

நமக்குத் தீராத கடனிருந்தால், அதைத் தீர்க்க செவ்வாய்க்கிழமை மிகவும் அற்புதகமாக உதவிசெய்கிறது. பலர் பெரும்பாலும் சிறிய தொகையோ அல்லது பெரிய தொகையோ கடன் வாங்கியிருந்தால், அதை அடைக்க முடியவில்லையென புலம்புவார்கள். கடனை அடைக்கதான் நாள், நட்சத்திரம், நேரம் உள்ளது.

குறிப்பாக, கடன், நோய் மற்றும் வழக்கு இவற்றைத் தீர்க்கவும், இவற்றிலிருந்து விடுபடவும் செவ்வாய்க்கிழமையில், செவ்வாய் ஓரையில் கடனை செலுத்துவது சிறப்பாகும். இவ்வாறு செய்தால், கடன் விரைவில் தீரும். அதேபோல நோயுள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஓரையில் வைத்தியம் பார்த்தால் விரைவில் நோய் குணமாகும். வழக்கு உள்ளவர்களும் இதேபோல செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஓரையில் அதற்குத் தீர்வுகாண முயன்றால் நமக்கு ஜெயம் உண்டாகும். அதேசமயம் ஹஸ்த நட்சத்திரத்தில் கடன் வாங்கினால் மேன்மேலும் கடன் பெருகி, பெரும் தொல்லையே உண்டாகும்.

செவ்வாய், முருகக் கடவுளுக்கு உகந்தது. செவ்வாயன்று செவ்வாய் ஓரையில் முருகனை மனமுருகி வழிபடுவது சிறப்பு தரும்

செல்: 98425 50844